Monday, January 13, 2014

சமகால பின்நவீனத்துவ நான்-லீனியர், ஆட்டோ பிக்சன் கவிதை எழுதுவது எப்படி?

எத்தனையோ பேர் கவிதை எழுதுவது எப்படின்னு சொல்லிட்டாங்க. இதோ என் பங்குக்கு சமகால பின்நவீனத்துவ நான்-லீனியர், ஆட்டோ பிக்சன் கவிதை எழுதுவது எப்படின்னு சொல்லிடறேன்..

முதல் வரி
நீங்கள் ஒரு <மிருகத்தை> வளர்க்கிறீர்கள் - (அந்த மிருகம் எந்த மிருகம்னு பிரச்சினை இல்லை. பறவையாக் கூட இருக்கலாம். அதுக்காக ஈமு கோழி, வான் கோழி எல்லாம் சொல்லக் கூடாது.)

அடுத்த வரிகள்,

அதற்கு நீங்கள் செய்யும் சீர் சடங்குகளைப் பற்றி இருக்கணும். ஆனா அதெல்லாம் நேர்மாறா இருந்தாத்தான் பொருத்தமா இருக்கும். அதாவது வீட்ல வளர்க்கிற மிருகம்னா அதற்கு காட்டு மிருகத்தின் தன்மைனு சொல்லணும். காட்டுமிருகத்தை வளர்த்தால் அது வீட்டு மிருகம் போல எழுதணும். இது நாலஞ்சு வரி இருந்தா நல்லாருக்கும், இல்லைன்னாலும் பரவால்ல.

அடுத்த வரி(கள்)

எதாவது ஒரு நாள்னு சொல்லிட்டு, அதைப் பற்றி ஏடாகூடமா சொல்லணும். இது ரெண்டு வரிகளுக்கு மிகாமல் இருந்தால் பெஸ்ட்.

கடைசியா,

அதை ஏதாவது ஒரு வழில கொடூரமா சாவடிச்சிடணும். அப்புறம் அந்தக் குருதி அங்கே இருந்திச்சி, இங்கே இருந்திச்சின்னு ஒரு சித்திரம். அவ்ளோ தான்..





சாம்பிள் கவிதை..

நீங்கள் ஒரு சிறுத்தையை வளர்க்கிறீர்கள்
அதற்கு உண்ண
பொன்னி அரிசிச் சோறும்
குடிக்க ஆவின் பாலும் கொடுக்கிறீர்கள்

அதன் நகத்தை
கிரீன் டிரென்ட்ஸ் மங்கை போல
சுத்தமாய் பேணுகிறீர்கள்
டவ் ஷாம்பு போட்டு குளிப்பாட்டி
அதன் பிடரி மயிரை
கிளிப் போட்டு செல்ல நாய்க்குட்டியாய் வளர்க்கிறீர்கள்

ஒரு அமானுஷ்ய நாளில்
அது தான் ஒரு சிறுத்தை என்று உணர்கிறது

தீரா சோகத்துடன் அதைத் தூக்கி
பாறைமேல் அறைகிறீர்கள்
பாறையில் படிந்த குருதித் துணுக்குகளில்
மேலும் ஒரு சிறுத்தை.

-- நா. சோழன்

அவ்ளோ தாங்க. நீங்களும் டிரை பண்ணிட்டு சொல்லுங்க.