தலைவலியும் திருகுவலியும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்ற பழமொழியை கேள்விப்பட்டிருக்கேன், ஆனால் அதை இப்போது அனுபவிக்க வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளேன். இதுவரைக்கும் எல்லோரையும் கலாய்ச்சிருகேன். நானே பலமுறை வாசகர் கடிதம் எல்லாம் எழுதி நக்கலடிச்சி போஸ்ட் போட்டுள்ளேன்.
இப்போத்தான் இணையத்தில் வாசகர் கடிதம் ஸ்க்ரீன் ஷாட் எல்லாம் வந்திச்சு. மேலும் பேஸ்புக்ல ஒருத்தர் "இன்னைக்கு வாசகர் கடிதம் ஒண்ணும் வரல, எனக்கு நானே அனுப்பிக்க வேண்டியது தான் போல"ன்னு கிண்டலடிச்சிருந்தார். மேலும் என்னோட நண்பர்கள் பலர் நான் எது எழுதினாலும் அது முழுக்க கற்பனையே ரேஞ்சுக்கு நிறுவ முயற்சி செய்யறாங்க. இதை எல்லாம் வச்சி பார்க்கும் போது சமகாலத்தில் வாசகர் கடிதம் பிரசுரித்தல் என்பது மல்லாக்கப் படுத்திட்டு எச்சி துப்புற மாதிரித்தான்.
இப்படி எல்லாம் யோசிச்சிட்டு இருக்கும் போது அதே வாச(கி)கரிடம் இருந்து இப்படி ஒரு மடல் வந்தது..
இப்படிக்கு,
XXXXXXXX

---
அன்பு நாகா, என் கடிதத்தை நீங்கள் வெளியிடத் தயங்குவது தெரிகிறது. ஆனால் உங்களைப் பற்றிய அடையாளம் இந்த விர்ஷுவல் உலகில் அதிகம் தெரியாத போது அதைப் பிரசுரப்பதில் ஒன்றும் கெட்டுப் போகப் போவதில்லை. இதற்கு மேலும் நான் உங்களை வற்புறுத்தப் போவதில்லை. இப்படிக்கு,
XXXXXXXX
---
சரி அப்படி என்ன தான் அந்தக் கடிதத்தில் எழுதி இருந்தது, இங்கே சொல்லி விட வேண்டியது தானே என்கிறீர்களா? அது ஒன்றும் அரண்மனை இரகசியம் இல்லை. இருக்கிற கொஞ்ச நஞ்ச மானமும் கப்பலேறி போய்விடக் கூடாதே என்ற சின்ன நப்பாசை மட்டுமே.. ரெண்டாவது கடிதமும் வந்திடுச்சு, இனிமேல் அதை வெளியிட வில்லை என்றால் இருக்கிற ஒரு வாச(கி)கரும் போய் விடுவார் என்ற பயத்தில் வெளியிடுகிறேன். இதோ அந்த கடிதம்..
---
அன்பு ரைட்டர் நாகா,
உங்கள் ட்விட்டர் பக்கத்தில் இப்படித்தான் இருக்கிறது. :-) உங்களை ரொம்ப நாளாய் ட்விட்டரில் பாலோ செய்கிறேன், அதன் பின் இப்போது கொஞ்ச நாளாய் தான் பேஸ்புக்கில் நண்பராகி இருக்கேன் (நீங்கள் அடிக்கடி சொல்லும் கூகிள் பிளசில் நான் இல்லை). நீங்கள் டெக்னிக்கல் வல்லுநர் எனவும் டாட் நெட்டில் வெப்ஸைட் கிரியேட் செய்து கலக்குவீங்க என்பதும் ட்விட்டரில் நம் நண்பர் ஒருவர் சொன்னார். உங்களை பர்சனலாக தெரிந்தவர் அவர், ஆனால் உங்களின் பெயரை சொல்ல மறுத்துவிட்டார். :-) இன்று நீங்கள் கவிதை என்று ஒன்றை பேஸ்புக்கில் போட்டிருந்தீர்கள். அது கிண்டலுக்கு என்பது உங்களை பின்தொடர்பவர்கள் அனைவரும் அறிவர். ஆனால் அதையும் நல்லா இருக்குன்னு சிலாகித்து உங்கள் நண்பர்கள் சிலர் கமெண்ட் போட்டிருந்தாங்க. அதைப் பார்த்த பின்பு தான் இதை எழுதவேண்டும் என்று தோன்றியது.
நீங்க ஏன் டெக்னிக்கல் சம்பந்தமாய் தமிழில் எழுதக் கூடாது? என்னைப் போன்ற இளம் சாப்ட்வேர் துறையினருக்கு அது மிகவும் உதவியாய் இருக்குமே? உங்களின் பதிலை உங்களின் ஸ்டேடசாக எதிர்பார்க்கிறேன். (அதிக உரிமை எடுத்து சொல்லுவதாக நினைத்தால் மன்னிக்க :( ) இதை நீங்கள் உங்கள் பக்கத்தில் வாசகர் கடிதமாய் வெளியிடவும். உங்கள் நண்பர்களின் கமெண்ட்ஸ்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
நன்றி..
இப்படிக்கு,
XXXXXXXX
---
குறிப்பு: ஆங்கிலத்தில் வந்த மடலின் என் தமிழ் மொழியாக்கம். நிறைய இருந்தது, பதிவின் நீளம் கருதி சுருக்கியுள்ளேன். பிழைக்கு மன்னிக்க.
--நாகராஜசோழன்
--நாகராஜசோழன்