முந்தா நாள் நைட்டு ஒரு மணி இருக்கும். ஒரு புது நம்பர்ல இருந்து கால் வந்தது. பதறியடிச்சி எழுந்து அட்டன்ட் பண்ணினேன். எதிர்பார்த்த மாதிரியே அது ஒரு வாசகர் கால் தான்.. நான் உங்க வாசகர் பேசுறேன்னு சொல்லிட்டு கட் பண்ணிட்டார். வாசகர்களை விட இலக்கியவாதிகள் அதிகாமாகிவிட்ட சமகால தமிழ் சூழலில் வாசகரை அவமதிப்பதா? அப்புறமென்ன வழக்கம் போல நான் தான் கால் பண்ணினேன். என்னோட செலவுல அரை மணி நேரம் இலக்கியம் பேசிட்டு, திருவான்மியூர்ல தான் இருக்கேன், நாளைக்கு காலைல உங்களைப் பார்க்க நேர்ல வர்றேன், பிரேக் பாஸ்ட் சாப்பிட்டுட்டே பேசலாம், தயாரா இருங்கன்னு சொல்லிட்டு போனை வச்சிட்டார். அப்புறம் எங்கே தூங்கிறது? அவரோட என்னென்ன பேசலாம், ஹாட் சிப்ஸ்ல என்னென்ன ஆர்டர் பண்ணலாம்னு யோசிச்சிட்டே வெடிய வெடிய முழிச்சிட்டு இருந்தேன்.
ஏழு மணி ஆனதும் ஒரு மாசமா தூர்வாராம இருந்த தலையை நண்பனோட ஷாம்பூ போட்டு சரி செஞ்சிட்டு, புது ட்ரஸ் எல்லாம் போட்டு தயாரா இருந்தேன். எட்டு மணிக்கு அவரிடம் இருந்து ஒரு போன் கால், தரமணி பக்கம் ஸ்ட்ரைக் பன்றாங்க, வரமுடியல, அடுத்த வாரம் பார்க்கலாம்னு சொல்லிட்டு வச்சிட்டார். அவர் வராமல் போனது கூட வருத்தம் இல்லை, ஆனால் ஹாட் சிப்ஸ் பொங்கலை மிஸ் பண்ணிட்டமேன்னு தான் வருத்தம். அப்புறம் என்ன, வழக்கமா சாப்பிடற மெஸ்ல சாப்பிட்டேன். நான் ஹாட் சிப்ஸ்ல சாப்பிட மாதிரி கனவு கண்டது மெஸ்கார நாயருக்கு தெரிஞ்சிடுச்சு போல. ரெண்டு மாச பாக்கியை மனசுல வச்சிட்டு நாயைப் பார்க்கிற மாதிரி பார்த்தார். சமகால இலக்கிய உலகில் இதெல்லாம் சகஜம் தானே, அதை கண்டுக்காமல் சாப்பிட்டுவிட்டு வந்திட்டேன்.
சரி என்ன பண்ணலாம்னு மோட்டு வளையப் பார்த்திட்டு படுத்திருந்த போது தான் கொரியர் கம்பெனியிலிருந்து போன். நான் ப்ளூ டார்ட்ல இருந்து பேசுறேன், ஆப்பிரிக்கா, இலத்தீன் அமெரிக்காவில் இருந்து எல்லாம் உங்களுக்கு கொரியர் வந்திருக்கு வந்து வாங்கிக்கங்க என்றார். இலக்கியவாதின்னா என்ன இளிச்சவாயனா கொண்டு வந்து கொடுங்க என்றேன். மூட்டைக் கணக்குல இருக்கு, மினிடோர் புடிச்சிட்டு வந்து எடுத்திட்டு போங்க, இல்லேன்னா குப்பை லாரில போட்டிருவோம்னு சொல்லிட்டு வச்சிட்டான். என்ன மாதிரியான சூழலில் வாழ்கிறோம்னு யோசிச்சிட்டு இருக்கும் போதே இன்னொரு கால். நாங்க புரஃப்பசனல் கொரியர்ல இருந்து பேசுறோம், உங்களுக்கு ஏகப்பட்ட லெட்டர்கள் வந்திருக்கு, வந்து வாங்கிட்டுப் போங்க ஸார், ஆமா ஏதாவது குலுக்கல் போட்டி நடத்தறீங்களா, நானும் கலந்திக்கலாமா ஸார் என்றார்.
வேண்டாம்னு சொன்னா எல்லாத்தையும் குப்பைல போட்டிருவீங்க தானே என்றேன். எப்படி ஸார் கண்டுபிடிச்சீங்க என்றார். சரி வர்றேன்னு சொல்லிட்டு வெளியே வந்தேன். எப்படியும் எல்லாமே வாசகர் கடிதமாத்தான் இருக்கும், கடன் வாங்கியாவது எல்லாத்தையும் எடுத்திட்டு வந்திடனும் என யோசித்துக்கொண்டே நடந்து ஒரு மினி லாரியில் முட்டி நின்றேன். யோவ் இவ்ளோ நேரம் ஆரன் அடிச்சிட்டு இருக்கேன், காது கேக்கலியா, வூட்ல சொல்லிட்டு வந்திட்டியா என செல்லமாக திட்டினார் டிரைவர். அவரைப் பார்த்து மய்யமாய் புன்னகைத்தேன்.
அதைப் பார்த்ததும் நீங்க இலக்கியவாதி தானே என்றார். எப்படிங்க கண்டுபிடிச்சீங்க என்றேன். மொசப் புடிக்கிற நாயை மூஞ்சிய பார்த்தாலே தெரியும் என்றார். ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா அண்ணே என்று இருந்த மானத்தை எல்லாம் விட்டுட்டு (எப்போ இருந்தது என்று கேட்கப் பிடாது) அவரிடம் கேட்டேன். அவரும் பெருந்தன்மையாய் இலக்கியம் பேசுறதை தவிர்த்து எந்த ஹெல்ப் வேணாலும் பன்றேன் என்றார். எனது தற்போதைய கஷ்டத்தைக் கூறி உதவ முடியுமான்னு கேட்டேன்.
அவருடைய அல்லக்கையும் நானும் சேர்ந்து எல்லா கடிதங்களையும் வீட்டுக்கு எடுத்திட்டு வந்திட்டோம். நான் நன்றி சொல்லும் முன்பே அவன் ஓடிவிட்டான். அவனுக்கெங்கே தெரியும் இது எவ்வளவு பெரிய இலக்கிய பெட்டகம் என்று. இருந்த கடிதங்களை எல்லாம் ஒரே இடத்தில் மலை போல குவித்து, கிளி போல தேடி ஒரு கடிதத்தை எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன்..
hello நாகராஜசோழன், I'm Elena,
How are you? I hope you are fine and in perfect health. Please I went through your profile and i read it and was interested in it, please if you do not mind I would like you to write me on this ID (elenadion64@ yahoo.com) hope to hear from you soon, and I will look forward to your email because I have something very important to tell you.
With much love
Elena,
Chile.